திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 7 டிசம்பர் 2020 (12:09 IST)

ஜெயலலிதா பத்தி என்ன பேசணும்? நான் ரெடி.. வாங்க! – ஆ.ராசாவுக்கு ஜோதி சவால்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி திமுகவின் ஆ.ராசா பல இடங்களில் அவதூறாக பேசி வருவதால் அவருடன் விவாதிக்க தயார் என வழக்கறிஞர் ஜோதி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக – திமுக இடையேயான வாக்குவாதங்களும் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் சமீபகாலமாக முன்னாள் அதிமுக பொதுசெயலாளரான ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு குறித்து பல இடங்களில் பேசி வரும் ஆ.ராசா நீதிமன்ற தீர்ப்பில் அவரை குற்றவாளி என்று குறிப்பிட்டுள்ளதாகவும் பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஜெயலலிதா வழக்கு குறித்து ஆ.ராசாவுடன் நான் விவாதிக்க தயார் என சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் ஜோதி தெரிவித்துள்ளார். மேலும் “ஜெயலலிதா அரசியலமைப்பு சட்டத்தை மீறியவர் என்றும், கொள்ளைக்காரி என்றும் நீதிமன்ற தீர்ப்பில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழை தாக்கல் செய்திருந்தால் வழக்கில் இருந்து அவரது பெயர் விடுவிக்கப்பட்டிருக்கும்” என்றும் கூறியுள்ளார்.