தொடர்புடைய செய்திகள்
- அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படலாம்.. உக்ரைன் தலைநகரில் தூதரகத்தை மூடிய அமெரிக்கா..!
- பாகிஸ்தான் கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்!
- நீதிமன்றம் அருகே வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு: கிருஷ்ணகிரியில் பட்டப்பகலில் நடந்த கொடூரம்..!
- கஸ்தூரியை மட்டும் இவ்வளவு தூரம் வன்மம், வன்மமாக கைது செய்தது ஏன்? பிரேமலதா
- டிபன் பாக்ஸை கொடுத்து 10 வயது மாணவியை வன்கொடுமை செய்த ஆசிரியர்! - அரியலூரில் அதிர்ச்சி!
வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரம்: ஆனந்தகுமாரின் மனைவியும் கைது..!
ஓசூரில் நேற்று வழக்கறிஞர் கண்ணன் தாக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பயிற்சி வக்கீல் ஆனந்தகுமார் கைது செய்யப்பட்டார் என்பது தெரிந்தது. ஆனால் தற்போது ஆனந்த குமாரின் மனைவியும் கைது செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்த வக்கீல் கண்ணன் நேற்று பட்டப்பகலில் ஜூனியர் வக்கீல் ஆனந்தகுமார் என்பவரால் அறிவாளால் வெட்டப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் வழக்கறிஞர் கண்ணனை தாக்கிய ஆனந்தகுமார் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். கண்ணன் மற்றும் ஆனந்தகுமார் ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட ஆனந்த குமாரின் மனைவி சத்யா காரணம் என்றும் மனைவியுடன் அடிக்கடி கண்ணன் தகராறு செய்ததால் தான் ஆனந்தகுமார் அவரை அறிவாளால் வெட்டியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து வக்கீல் கண்ணனை வெட்டிய சம்பவம் தொடர்பாக ஆனந்த குமாரை கைது செய்த போலீசார் அவரது மனைவி சத்யாவையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலை முயற்சிக்கு உடனடியாக இருந்ததாக சத்யா மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
Edited by Siva
