1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 6 அக்டோபர் 2020 (11:30 IST)

நோ டவுட் இவர் தான் சிம் காண்டிடேட்: நாளை வரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

முதல்வர் வேட்பாளர் குறித்து அதிமுக தலைமை 7 ஆம் தேதி அறிவிக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது. 
 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்து ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளது. இதுகுறித்து அதிமுக அமைச்சர்கள் இருவரையும் சந்தித்து பேசி வருகின்றனர். 
 
இந்நிலையில் சொந்த ஊரில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதேபோல ஈபிஎஸ் இங்கு அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். துணை முதல்வருக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் மட்டுமே உள்ள நிலையில் முதல்வர் எடப்பாடியாருக்கு ஆதரவாக அமைச்சர்கள் பேச இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இன்னும் இவர்களது அலோசனைகளும் பேச்சுவார்த்தைகளுமே முடியாத நிலையில் ஏற்க்னவே சொன்னது போல முதல்வர் வேட்பாளர் குறித்து அதிமுக தலைமை 7 ஆம் தேதி அறிவிக்குமா என சந்தேகம் எழுந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது திடமிட்டபடி நாளை அதாவது அக். 7 முதல்வர் வேடபாளர் யார் என அதிமுக தலைமை அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.