செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 16 டிசம்பர் 2019 (16:28 IST)

’இந்து ராஷ்டிரீயம்’ ஒன்றே பாஜகவின் நோக்கம்: போட்டுடைத்த அதிமுக எம்பி!

இந்து ராஷ்டிரீயம் ஒன்றே பாஜகவின் நோக்கம் என மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் வெளிப்படையாக பேசியுள்ளார். 
 
குடியுரிமை குறித்து நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில்,  அதிமுகவை சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் பாஜக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சியினரும் மசோதாவை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில்தான் இருந்தனர் என தெரிவித்துள்ளார். இதனோடு மேலும் சில கருத்துக்களையும் வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, 
 
பாஜகவின் நோக்கம் இந்து ராஷ்டிரீயத்தை உருவாக்குவதாகும். ஆனால், நேரடியாக பாஜக எதையும் செய்யாது. இந்த வார்த்தையை (இந்து ராஷ்டிரீயம்) வெளிப்படையாக பயன்படுத்தாமல் பல வார்த்தைகளில் சொல்லும். 
 
பாஜக தலைவர்கள் குறிப்பாக உள்துறை அமைச்சகத்தை வழிநடத்தும் அமித் ஷா தனது நிலைப்பாட்டை இந்த நோக்கத்திற்காக பயன்படுத்திக்கொள்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.