1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 16 டிசம்பர் 2019 (16:12 IST)

நாங்கள் தீ வைக்கவில்லை; தீயை அணைத்தோம்! – டெல்லி போலீஸ் விளக்கம்!

டெல்லியில் மாணவர்கள் பேரணியில் ஏற்பட்ட கலவரத்தில் போலீஸ் எந்த வாகனத்தையும் எரிக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் டெல்லி பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்ட பேரணி நடத்தியபோது வன்முறை வெடித்தது. போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலவரத்தை அடக்கினர்.

இந்த சம்பவத்தின் போது போலீஸே பல வாகனங்களை கொளுத்தியதாகவும், வன்முறை செயல்களை செய்ததாகவும் பலர் பல வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். ஆனால் இந்த குற்றசாட்டை போலீஸ் தரப்பில் மறுத்துள்ளனர். தாங்கள் எந்த வாகனத்தையும் கொளுத்தவில்லை என்றும், மாறாக எரிந்து கொண்டிருந்த வாகனங்களை போலீஸார் தண்ணீர் ஊற்றி அணைத்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.