1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 24 ஜனவரி 2024 (16:57 IST)

பல்லாவரம் திமுக எம்.எல்.ஏவின் மகன் - மருமகள் விவகாரம்: அதிமுக போராட்டம் அறிவிப்பு

ADMK
பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ மகன் மருமகள் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் தங்கள் வீட்டில் வேலை பார்த்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. அந்த சிறுமியின் பேட்டி இணையதளங்களில் வைரல் ஆன நிலையில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
 
இந்த நிலையில் பல்லாவரம் திமுக எம்எல்ஏவின் மகன் மகள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்கள் மீது  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் சிறுமியை கொடுமைப்படுத்தியவர்களை கைது செய்ய அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பிப்ரவரி 1ம் தேதி ஆர்ப்பாட்டம் எப அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்,
 
பல்லாவரம் திமுக எம்.எல்.ஏவின் மகனையும், மருமகளையும் இதுவரை கைது செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, கொத்தடிமை முறையை ஒரு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ குடும்பம் நடைமுறைப்படுத்தி உள்ளது என்றும், குற்றவாளிகளை காப்பாற்ற நினைக்கும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் என்றும் தெரிவித்துள்ளார். 
 
Edited by Mahendran