புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 4 ஜனவரி 2020 (10:38 IST)

எம்.ஜி.ஆர் காலத்து முக்கிய புள்ளி மறைவு: அதிமுகவினர் கலக்கம்!

அதிமுகவின் முக்கிய புள்ளியான பி. எச். பாண்டியனின் மரணம் அதிமுகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் இருந்த போதிருந்து அதிமுகவில் முக்கியப் புள்ளியாக வலம் வந்தவர் பி. எச். பாண்டியன். பி. எச். பாண்டியனுக்கு சில நாட்களுக்கு முன் உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 4 நாட்கள் வரை வேலூர், சி. எம். சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார். அதன்பின் இவர் நலமாக இருந்தார் எனக் கூறப்படுகிறது.
 
இதனிடையே இன்று காலை பி. எச். பாண்டியனுக்கு உடல் நலத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்குச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது அதிமுகவினரின் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.