செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 26 ஜூன் 2019 (18:16 IST)

ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பிரதிநிதி நான் – ரவீந்திரநாத் பேச்சால் கடுப்பான திமுக

நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் “ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பிரதிநிதி நான்” என அதிமுக எம்.பி ரவீந்திரநாத் பேசியது திமுகவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று நடந்த மக்களவை கூட்டத்தில் தமிழகத்தின் எம்.பிக்கள் கலந்து கொண்டனர். அதில் பேசிய அதிமுகவின் ஒரே எம்.பி ரவீந்திரநாத் தமிழகத்தின் கிராமப்பகுதிகளில் மருந்தகம் அமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பேசினார். அதிமுக மீதான குற்றசாட்டுகள் பொய்யானவை என்று பேசிய அவர் “ஒட்டுமொத்த தமிழகத்தின் பிரதிநிதியாக நான் இங்கு வந்திருக்கிறேன். அதிமுக அரசு மக்களுக்காக செய்த அனைத்து நல திட்டங்களுக்கும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது” என பேசினார்.

தான் மட்டும்தான் தமிழகத்தின் ஒரே பிரதிநிதி என ரவீந்திரநாத் பேசியது திமுக எம்.பிக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் பெருவாரியான தொகுதிகளை வெற்றிபெற்று இத்தனை பேர் இங்கே வந்து உட்கார்ந்திருக்கும்போது, ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்று விட்டு தமிழகத்தின் ஒட்டு மொத்த பிரதிநிதி என பேசி கொள்கிறாரே. அப்புறம் நாங்க எங்கிருந்து வந்திருக்கிறோமாம்? என கடுப்பில் திமுக எம்.பிக்கள் இருப்பதாக தெரிகிறது.

அதில் தூபம் போடும் வகையில் அதிமுக மீது பொய் குற்றம் சாட்டுகிறார்கள் என ரவீந்திரநாத் குத்திக்காட்டி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.