டெல்லி போனதும் தமிழ்நாட்டை மறந்த எம்.பி – தண்ணீர் பிரச்சினை பற்றி தெரியாத ரவீந்திரநாத்

ravindranath
Last Modified ஞாயிறு, 23 ஜூன் 2019 (10:05 IST)
தமிழத்தில் தண்ணீர் பஞ்சம் அதிகரித்திருக்கும் நிலையில் “தண்ணீர் பிரச்சினை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது” என அதிமுக-வின் ஒரேயொரு எம்.பி ரவீந்திரநாத் சொல்லியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சென்னை முதல் நெல்லை வரை பல பகுதிகள் கடுமையான வறட்சியினை சந்தித்து வருகின்றன. இதனால் ஐடி நிறுவனங்களும், உணவு விடுதிகளுமே மூடப்பட்டு வருகின்றன. அரசு நிறுவனங்களான மெட்ரோவில் கூட கழிப்பறைகள் மூடப்பட்டு விட்டன.
இந்நிலையில் இது குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்று அதிமுக எம்.பி ரவீந்திரநாத்திடம் பேசியபோது “தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேற்கொண்டு தமிழகத்தில் தற்போது என்ன நடக்கிறது என்று தனக்கு தெரியாது” என்று பதிலளித்துள்ளார்.

இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லிக்கு சென்றதும் தமிழ்நாட்டில் உள்ள பிரச்சினைகளை மறந்துவிட்டாரா ரவீந்திரநாத் என எதிர்கட்சி அரசியல் வட்டாரங்கள் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :