புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 10 ஜூன் 2021 (18:14 IST)

ஜூன் 14 ஆம் தேதி அதிமுக எம் எல் ஏக்கள் கூட்டம்!

ஜூன் 14 ஆம் தேதி நடக்கும் அதிமுக எம் எல் ஏக்கள் கூட்டத்தில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டும் என தலைமை அறிவித்துள்ளது.

இது சம்மந்தமாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள குறிப்பில் ‘அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் வருகிற 14-ம் தேதி சென்னை ராயப்பேட்டையிலுள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியைக் கடைபிடித்தும், முகக் கவசம் அணிந்தும், இன்னபிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் எம்.எல்.ஏ அடையாள அட்டையுடன் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

14-ம் தேதியன்று தலைமைக் கழகத்தில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மட்டுமே நடைபெற இருப்பதால், கொரோனா காரணமாக அன்றைய தினம் கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் தலைமைக் கழகத்துக்கு வருவதைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, தலைமைக் கழக வளாகத்துக்குள் சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர வேறு யாரையும் அனுமதிக்க இயலாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்’  எனக் கூறப்பட்டுள்ளது.