செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 6 மார்ச் 2024 (15:07 IST)

அதிமுக சரித்திரத்தில் இப்படி நடந்ததே இல்லை.. விருப்பமனு கொடுக்க ஆளே இல்லை..!

admk office
அதிமுக சரித்திரத்தில் இப்படி நடந்ததே இல்லை என்றும் விருப்பமனு கொடுக்கும் தேதி அறிவித்தால் பலர் முந்தி கொண்டு விருப்பமனு கொடுக்கும் நிலையில் தற்போது விருப்பமனு கொடுக்க ஆளே இல்லை என்று அதிமுக தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
இது குறித்து அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறிய போது 2019 ஆம் ஆண்டு தேர்தல் அறிவிக்கப்பட்டபோது ஏகப்பட்ட பேர் விருப்பமனு போட்டி போட்டுக் கொண்டு கொடுத்தார்கள் என்றும் குறிப்பாக மதுரையில் போட்டியிட மூன்று பிரபலங்கள் கடுமையாக போராடினார்கள் என்று கூறினார் 
 
ஆனால் தற்போது யாராவது சீட் கேட்டு வருவார்களா என்று செல்லூர் ராஜு உள்பட பலர் காத்திருக்கின்றனர் என்றும் டாக்டர் சரவணன் என்ற ஒருவரை தவிர வேறு யாருமே இதுவரை மதுரையில் போட்டியிட விருப்பமனு கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார் 
 
இன்று தான் விருப்பமனு கொடுக்க கடைசி தேதி என்ற நிலையில் அதிமுகவில் போட்டியிட யாருமே முன்வரவில்லை என்றும் அதிமுக சரித்திரத்தில் இது என்றுமே நடக்காத ஒன்று என்றும் அந்த நிர்வாகி வருத்தத்துடன் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran