மானம், மரியாதைய விட முதல்வர் பதவி முக்கியமில்ல... ஸ்டாலின் பொளேர்!!
முதல்வர் பதவிக்காக ஒரு போது நான் என் சுயமரியாதையை விட்டுகொடுக்க மாட்டேன் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தானும், ஸ்டாலினும் ஒரே சமயத்தில் அரசியலுக்கு வந்ததாகவும், ஸ்டாலின் போல் குடும்ப அரசியலால் பதவிகள் பெறாமல், தான் கஷ்டப்பட்டு முதல்வர் பதவியை அடைந்ததாகவும் கூறியிருந்தார்.
எடப்பாடியாரின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேசிய மு.க.ஸ்டாலின், மண்புழு போல ஊர்ந்து சென்று முதல்வர் பதவியில் அமர எனக்கு விருப்பமில்லை. அப்படி ஒரு பதவியே தேவையில்லை. நான் 1989க்கு முன்பிருந்தே அரசியலில் இருக்கிறேன். அப்போதெல்லாம் எடப்பாடி பழனிசாமி எங்கிருந்தார். நான் மாணவனாக இருந்த போதே அரசியலில் இறங்கியவன் என பேசினார்.
இதனைத்தொடர்ந்து திமுக நிர்வாகி ஒருவரின் இல்லத்திருமண விழாவில் கலந்துக்கொண்டு திரும்பிய போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, இடஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்களை முறையாக நிறைவேற்றி உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம் என்று விளக்கமளித்தார்.
நான் முதல்வர் பதவி கனவில் தாம் மதப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறி வருவதாக ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். ஆனால், முதல்வர் பதவிக்காக ஒருபோதும் நான் சுயமரியாதையை இழக்க மாட்டேன் என்று ஸ்டாலின் கூறினார்.
முதல்வருக்கும், எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ள இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.