வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 23 ஜூலை 2018 (15:03 IST)

அதிமுக பிரமுகர் வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டி படுகொலை: சீர்காழியில் பரபரப்பு

நாகை மாவட்டம் சீர்காழி திரிபுரசுந்தரி நகரை சேர்ந்தவர் ரமேஷ்பாபு(45) அதிமுக கொள்ளிடம் ஒன்றிய மாணவரணி செயலாளர். மேலும் காண்ராக்டர் தொழிலிலும் ஈடுபட்டு வந்த இவர் அதிமுகவின் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன் மற்றும் எஸ்பி வேலுமணிக்கு  நெருங்கிய நண்பராக இருந்தார்.



இந்நிலையில் இன்று காலை 11:30 மணிக்கு சீர்காழி வடக்கு வீதியில் ஒருவரை சந்தித்துவிட்டு தனது காரில் ஏறும் போது, காரில் வந்த மர்மகும்பல் ஒன்று ரமேஷ்பாபு மீது அரிவாளால் வெட்டியும், வெடிகுண்டு வீசியுள்ளனர். இதில் தலை முற்றிலும் சிதைந்த நிலையில் ரமேஷ்பாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த சீர்காழி டிஎஸ்பி சேகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரமேஷ்பாபு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்,

இச்சம்பவத்தை தொடர்ந்து கலவரம் ஏற்படாமல் தடுக்க ஏராளமான போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். படுகொலை செய்யப்பட்ட ரமேஷ்பாபுவுக்கு சுதா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர்.