திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 24 மே 2018 (17:49 IST)

சவுதி இளவரசர் படுகொலை? பின்னணியில் என்ன?

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் படுகொலை செய்யப்படிருக்கலாம் என ஈரான் ஊடங்களில் வெளியாகும் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
சவுதி பட்டத்து இளவரசர் கடந்த மாதம் 21 ஆம் தேதி பின்னர் இதுவரை பொது இடங்களில் எங்கும் காணப்படுவது இல்லை. அரச குடும்பத்தில் அவருக்கு உள்ள சில எதிரிகல் அவரை கொன்று இருக்கலாம் என்றும் அல்லது ஆளில்லா விமான தாக்குதலில் அவருக்கு காயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரலாம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
பட்டத்து இளவரசாராக பதவியேற்ற பின்னர் எந்த ஒரு நிகழ்ச்சியையும் புறக்கணிக்காதா இவர் கடந்த ஒரு மாதமாக எங்கு இருக்கிறார் என்பது கூட தெரியவில்லையாம் மக்களுக்கு. இந்நிலையில், இந்த பரபரப்புக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக இளவரசரின் புகைப்படத்தை சவுதி அரச குடும்பம் வெளியிட்டது. 
 
ஆனால், இந்த புகைப்படத்தை கண்ட பின்னரும் மக்கள் இளவரசர் உயிருடன் இருக்கிறார் என்பதை மக்கள் நம்புவதற்கு தயாரக இல்லை.