திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 30 டிசம்பர் 2017 (05:43 IST)

3 மாதத்தில் கவிழும், தினகரன்: 100 ஆண்டுகள் ஆட்சி நீடிக்கும், செல்லூர் ராஜூ

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ ஆகியுள்ள டிடிவி தினகரன் அவர்கள் ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆட்சி இன்னும் 3 மாதங்களில் கவிழும் என்று கூறி வருகிறார். இந்த நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் இந்த ஆட்சி 100 ஆண்டுகள் தொடரும் என்று கூறியுள்ளார்.

கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் குறித்து திருப்பூரில் ஆய்வு செய்த அமைச்சர் செல்லூர் ராஜூ பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜெயலலிதாவின் திட்டங்கள் அனைத்தையும் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி சரியான முறையில் நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறார். இந்த ஆட்சி இன்னும் 3 1/2 ஆண்டுகளுக்கு தொடரும். அடுத்தும் இந்த ஆட்சியே தொடரும். இன்னும் 100 ஆண்டுகளுக்கும் இந்த ஆட்சிதான் தொடரும். முதல்வர் எடப்பாடியின் ஆலோசனையின்
பேரில் இந்தியாவிலேயே நம் மாநிலத்துக்குத்தான், பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக 2558 கோடி ரூபாய் வரை விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை பெற்றுக்கொடுத்திருக்கிறோம். வேறு எந்தவொரு மாநிலமும் இந்த அளவுக்கு செய்ததில்லை. இதற்காக மத்திய அரசே நம்மை பாராட்டியிருக்கிறது.

இவ்வாறு செல்லூர் ராஜூ அவர்கள் கூறினார்.