வெள்ளி, 13 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 13 பிப்ரவரி 2026 (12:25 IST)

வெளியாகும் அதிமுக முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்!.. வேகம் காட்டும் பழனிச்சாமி..

வெளியாகும் அதிமுக முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்!.. வேகம் காட்டும் பழனிச்சாமி..
2026 சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடக்கவுள்ள நிலையில் தமிழக முக்கிய அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் வேகம் காட்ட துவங்கியிருக்கிறது. முக்கியமாக திமுக, அதிமுக இரு கட்சிகளும் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. இதில் திமுகவை விட அதிமுக வேகமாக செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே தேர்தல் வாக்குறுதிகளை இரண்டு கட்டமாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.. ஆண்களுக்கு இலவச பயணம், குலவிளக்கு திட்டமாக பெண்களுக்கு மாதம் 2 ஆயிரம், வருடத்திற்கு மூன்று இலவச கேஸ் சிலிண்டர் என்றெல்லாம் அறிவித்தார்.

இந்நிலையில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் வருகிற 24-ஆம் தேதி வருகிறது. அன்று அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது என்பதை எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கவுள்ளாராம். மேலும், 15 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் அன்று வெளியாகும் என்கிறார்கள். அதில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் தொகுதிகள் இடம் பெற்றிருக்கும் என தெரிகிறது..

அதிமுக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்திருந்தாலும் தமிழகத்தை பொறுத்தவரை கூட்டணிக்கு தலைமை அதிமுகதான் என தொடர்ந்து சொல்லி வருகிறது. அனேகமாக அதிமுக 170 தொகுதிகளிலும், பாஜக 25 தொகுதிகளிலும், அன்புமணி பாமக 23, தாமாக 6, மற்ற சிறு கட்சிகள் ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடலாம் என கணிக்கப்படுகிறது..

அதிமுக வேகமாக செயல்பட்டு வரும் நிலையில் திமுக இதுவரை தொகுதி பங்கீட்டை முடிக்கவில்லை. முதல்கட்ட வேட்பாளர் பட்டியலையும் திமுக தயார்செய்துவிட்டதாக தெரியவில்லை. வருகிற 22ம் தேதிதான் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை திமுக தொடங்க திட்டமிட்டிருக்கிறது.