1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 20 ஜூன் 2022 (14:23 IST)

அதிமுக பொதுக்குழு திட்டமிட்டப்படி நடைபெறும் - ஓபிஎஸ் கடிதம் நிராகரிப்பு??

அதிமுக பொதுக்குழு திட்டமிட்டப்படி நடைபெறும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

 
அதிமுகவில் ஒற்றை தலைமை தேவை என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் சமீப காலமாக எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
 
ஒற்றைத் தலைமை தேவை என எடப்பாடி அணி கூறி வரும் நிலையில், ஒற்றைத் தலைமை தேவையில்லை என ஓபிஎஸ் அணியினர் மறுத்து வருகின்றனர். மேலும் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் அனுமதி இல்லாமல் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை கொண்டு வர முடியாது என ஓபிஎஸ் அணி கூறி வருகின்றது.
 
ஆனால் எடப்பாடியார் அணியோ பொதுக்குழு எடுக்கும் முடிவுதான் ஒற்றைத் தலைமையை தீர்மானிக்கும் என கூறி வருகிறது. ஒற்றைத் தலைமையை கொண்டு வருவதற்கான அனைத்துக்கட்ட பணிகளையும், பேச்சுவார்த்தையையும் எடப்பாடி பழனிசாமி முடித்துவிட்டதாக தெரிகிறது. இதனால் ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஓரம்கட்டப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
 
இந்நிலையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க எடப்பாடிக்கு ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் வலியுறுத்தியுள்ளார். நிகழ்ச்சி நிரலை முன்கூட்டியே நிர்ணயித்து பொதுக்குழுவை நடத்த வேண்டும். அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஓபிஎஸ்க்கு எழுதிய கடிதம் ஈபிஎஸ்க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
 
இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து பேசியுள்ளார். அபர் கூறியுள்ளதாவது, அதிமுக பொதுக்குழு திட்டமிட்டப்படி நடைபெறும். பொதுக்குழுவில் சுமுகமான முடிவு எட்டப்படும். ஒற்றைத் தலைமை வேண்டும் என்றுதான் சொல்கிறோம், யார் என்று கூறவில்லை. அதிமுகவில் ஒற்றைத் தலைமையை அனைவரும் விரும்புகின்றனர் என தெரிவித்துள்ளார்.