சசிகலா ஒரு செத்த பாம்பு.. கட்சி கூட்டத்தில் ஆவேசமாக பேசிய கேபி முனுசாமி..!
பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி குறித்து ஆய்வு செய்வதற்காக கூட்டம் நடந்தபோது அதில் சசிகலாவை சேர்த்துக் கொள்ளலாம் என்று ஆலோசனை கூறிய போது சசிகலா ஒரு செத்த பாம்பு அவரைப் பற்றி இங்கு பேசக்கூடாது என கேபி முனுசாமி ஆவேசமாக பேசியதாக தகவல் வெளியாகி உள்ளன.
சசிகலா, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகிய மூவரையும் சேர்க்காவிட்டால் பரவாயில்லை அவர்களுடைய ஆதரவாளர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்று கட்சி நிர்வாகிகள் கூறிய போது எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று யார் வந்தாலும் சேர்த்துக் கொள்ளலாம் என்று கேபி முனுசாமி கூறினார்.
மேலும் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி இல்லை என்பதால் தான் அதிமுகவுக்கு வாக்குகள் குறைந்தது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் பாட்டாளி மக்கள் கட்சி தனித்து நின்ற போது கூட அதிமுக அதிக வாக்குகள் பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்றும் கேபி முனுசாமி கூறியுள்ளார்
2026 ஆம் ஆண்டு தேர்தலுக்குள் கட்சியை பலப்படுத்தும் முயற்சிகளை தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஈடுபட வேண்டும் என்றும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்றும் அவர் தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.
Edited by Siva