செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 8 மார்ச் 2021 (14:59 IST)

வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது கழகமாக இருக்கட்டும்! – அதிமுக தொண்டரின் கதை!

வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது நம் கழகமாக இருக்கட்டும் அரவக்குறிச்சியில் கலக்கி வரும் பொறியாளர் TPM ஆத்திக்

தமிழர்களின் வரலாற்றில் வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்கின்ற தாரக சொல்லை இன்றும் நாம் பின்பற்றி வருகின்றோம். ஆனால் ஒரு சில தமிழ் அவமானம் என்று கருதி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகள் செல்லும் போது அவர்களுடைய பெயர், பேச்சு மற்றும் நாகரீகம் என்று அனைத்தையும் வித விதமாக மாற்றி வருகின்றனர்.

ஆனால் மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான செல்வி ஜெ ஜெயலலிதா உயிரிழந்த போது அதிமுக கட்சி பல கோணங்களில் பிரிந்தது. ஆனால் அன்று முதல் இன்றுவரை வீழ்வது நானாக இருந்தாலும் வாழ்வது நம் கழகமாக (அதிமுக) இருக்கட்டும் என்கின்ற முறையில் இன்றும் கட்சிக்காக அவர்களில் ஒருவர்தான் திருப்பூர் TPM ஆத்திக். திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக அதிமுக வில் பதவி வகிக்கும்

இவர் ஏற்கனவே அதிமுக கட்சியில் பழம்பெரும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் யாரேனும் மருத்துவ உதவி தேவைபட்டால் உடனே துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும், தேனி எம்.பி.,யுமான ரவீந்திரநாத்  அவர்களின் பார்வைக்கு கொண்டு சென்று இதுவரை இவருக்கு தெரிந்த நபர்கள் ஏராளமானோரை உயிர் பிழைக்க மருத்துவ வசதிகள் செய்து கொடுத்துள்ளார். இதுமட்டுமில்லாமல் கொரோனா காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு அதிமுக சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தாராபுரம் தொகுதி (தனி) என்று இருப்பதால் தற்போது அருகே உள்ள கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு தற்போது அதிமுக கட்சி சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் அவர் தற்போது அரவக்குறிச்சி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆயத்தமானதோடு, அனைவரின் நலன்களையும் செல்பேசி மூலமாக கேட்டு வருகிறார் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி ஆத்திக், இன்று வரை அவர் அனைவரிடமும் கூறி வருவது மட்டுமல்ல, அவரது ஒரே ஒரு தாரக மந்திரமும் நம்மை விட நமக்கு நம் கழகம் தான் முக்கியம் என்பது தான்