திங்கள், 7 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 3 ஆகஸ்ட் 2016 (17:56 IST)

89 வயக்காட்டு பொம்மைகள் ; 131 கொத்தடிமைகள் : திமுக-அதிமுக மோதல்

திமுக எம்.எல்.ஏக்களை வயக்காட்டு பொம்மைகள் என்று அதிமுக உறுப்பினர் ஒருவர் கூற, பதிலுக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் கொத்தடிமைகள் என்று மு.க.ஸ்டாலின் பதிலுக்கு போட்டுத் தாக்க இன்று சட்டசபை விவாதம் சூடு பறந்தது.


 

 
சட்டசபையில் இன்று மின்சாரத்துறைக்கான மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அதிமுக எம்.எல்.ஏ முத்தையா, திமுக உறுப்பினர்களை 89 வயக்காட்டு பொம்மைகள் என்று கூறினார். இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
அடுத்து பேசிய மு.க.ஸ்டாலின், அதிமுக உறுப்பினர்களை 131 கொத்தடிமைகள் என்று கூறினார். இதற்கு அதிமுகவினர் எதிப்பு தெரிவித்தனர்.  மேலும், ஸ்டாலின் கூறியதை சபாநாயகர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிட்டார். ஆனால், முத்தையா கூறியதை அவர் நீக்கவில்லை.
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும், அவையிலிருந்து வெளி நடப்பு செய்தனர். 
 
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் “சபாநாயகர் நான் பேசியதை மட்டும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கிவிட்டார். மாறாக அதிமுக உறுப்பினர் பேசியதை நீக்க மறுத்துவிட்டார். அவர் பொதுப்படையாக செயல்படவில்லை. மேலும் சர்வாதிகார மனநிலையில் செயல்படுகிறார். முதல்வர் என்ன சொல்கிறாராரோ அதைக் கேட்டு அப்படியே செயல்படுகிறார்.இது வெட்கப்பட வேண்டிய ஒன்று” என்று கருத்து தெரிவித்தார்.