திங்கள், 4 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (10:00 IST)

ஏசி சண்முகம், கதிர் ஆனந்த் மாறி மாறி முன்னிலை: என்ன நடக்குது வேலூரில்?

வேலூர் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில், முதல் கட்டமாக எண்ணப்பட்ட தபால் வாக்குகள் மற்றும் முதல் சுற்று வாக்குகளில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் அவர்கள் சுமார் ஆயிரத்து 500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்
 
இதனை அடுத்து ஒரு சில நிமிடங்களில் திமுக வெட்பாளர் கதிர்ஆனந்த் அதே 1500 வாக்க்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இருவரும் மாறி மாறி முன்னணியில் இருப்பதால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கணிக்க முடியாத நிலை இருந்து வந்தது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் கே சி சண்முகத்தை திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை விட  7,074 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை இருப்பதாக தெரிகிறது. ஆனால் இந்த வித்தியாசம் சில நிமிடங்கள் கூஅ நீடிக்கவில்லை. இதனையடுத்து வந்த தகவலின்படி கதிர் ஆனந்த்  74 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அதிமுக வேட்பாளருக்கு 56,658 வாகுகளும், திமுக வேட்பாளருக்கு 56,722 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளருக்கு 2,502 வாக்குகள் கிடைத்துள்ளது
 
ஏசி சண்முகம் மற்றும் கதிர் ஆனந்த் ஆகிய இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்று வருவதால் வேலூர் தேர்தலின் முடிவில் என்ன நடக்கின்றது என்றே தெரியவில்லை