அக்டோபர் 2ம் தேதி முதல் மகளிருக்கு கட்டணமில்லா பயணம்!.. முதல்வர் விஜய் துவங்கி வைப்பு!...
2026 தேர்தல் நடப்பதற்கு முன்பு தவெக வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர்க்கு தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த திமுக ஆட்சியில் ஒரு குறிப்பிட்ட கிலோமீட்டர் தூரம் வரைக்கும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தவெகவோ தமிழக முழுவதும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு கூட மகளிருக்கு இலவச பயணம் என அறிவித்தது. ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக வெற்றி பெற்ற ஆட்சிக்கு வந்த பின்னரும் அதை அமல்படுத்த முடியவில்லை. தமிழக அரசு நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதே அதற்கு காரணம் என சொல்லப்பட்டது..
இந்நிலையில், மகளிர் கட்டணம் இல்லா பயணத் திட்டத்தின் விரிவாக்கமான வெற்றி பயணத்திட்டம் வரும் அக்டோபர் 2ம் தேதி செயல்படுத்தப்படவிருக்கிறது. அதாவது, அக்டோபர் 2ம் தேதி வெற்றிப் பயணத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் துவங்கி வைக்கவிருக்கிறார். 12,692 பேருந்துகள் மூலம் நாளொன்றுக்கு 84.32 லட்சம் பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.