1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : சனி, 9 டிசம்பர் 2023 (11:16 IST)

கமல் ஒரு அரசியல்வாதியே இல்லை, பச்சோந்தியை விட மோசம்: எடப்பாடி பழனிசாமி

கமல்ஹாசன் ஒரு அரசியல்வாதியே இல்லை என்றும் அவரை தான் ஒரு அரசியல்வாதியாகவே கருதவில்லை என்றும் பச்சோந்தியை விட மோசமாக கலர் மாறும் நபர் என்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் ஏற்பட்ட வெள்ள  நிவாரண பணியில் சுணக்கம் இருப்பதாக நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.

அப்போது கமல்ஹாசன்  குறை கூறுவதை விட்டுவிட்டு அனைவரும் களத்தில் இறங்கி வேலை செய்வோம் என்று கூறியது குறித்து கருத்து கேட்டபோது கமல்ஹாசனை தான் ஒரு அரசியல்வாதி போலவே நினைக்கவில்லை என்றும் அவர்  ஒரு பச்சோந்தி என்றும் தெரிவித்தார்.

பச்சோந்தி கூட சில மணி நேரம் கழித்து தான் கலர் மாறும் ஆனால் கமல்ஹாசன் அடிக்கடி கலர் மாறுவார் என்றும் அவர் திமுக சார்பில் ஒரு ஒரே ஒரு எம்பி தொகுதியில் போட்டியிடுவதற்காக இவ்வாறு கூறி வருகிறார் என்றும் தெரிவித்தார்.  முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva