1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 6 செப்டம்பர் 2018 (19:39 IST)

இந்த விஷயத்தில் ரஜினி கருத்து சொல்ல தயங்குவது ஏன்? கஸ்தூரி கேள்வி

ஊரே விவாதிக்கும் விஷயத்தில் ரஜினி மட்டும் கருத்து சொல்ல மறுப்பது ஏன் என்று நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சென்னை - தூத்துக்குடி சென்ற விமானத்தில் தமிழிசை பயணம் செய்தபோது சோபியா என்ற பெண் ஒருவர் பாசிச பாஜக ஒழிக என்று கோஷமிட்டுள்ளார்.
 
இதனால் ஆத்திரமடைந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை அந்த பெண்ணுடன் வாக்குவாதம் செய்தததோடு அவர் மீது புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சோபியா கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
 
இதுதொடர்பாக ரஜினியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது தான் எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை என்று தெரிவித்தார். கள்ளக்காதல் விவகாரத்தில் பெற்ற குழந்தைகளை கொலை செய்த அபிராமியின் கணவருக்கு ஆறுதல் தெரிவித்த ரஜினி இந்த விவாகரத்தில் ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
இதுதொடர்பாக நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
 
ஊரே விவாதிக்கும் விஷயத்தில் ரஜினி மட்டும் கருத்து சொல்ல ஏன் இவ்வளவு தயங்க வேண்டும்? தவறு நடக்கையில் பேசாமலிருப்பதும் தவறுதான் என்று பதவிட்டுள்ளார்.