செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 8 ஏப்ரல் 2019 (12:18 IST)

இந்த மீடியாக்களுக்கு இதேதான் வேலையா!!! கொதிக்கும் கஸ்தூரி...

நாம் கூறும் கருத்தை திரித்து போடுவதில் மீடியாக்கள் கை தேர்ந்தவை என்பது போல கஸ்தூரி பேசியுள்ளார்.
சமீபத்தில் நடிகை கஸ்தூரியிடம் மத்தியில் யார் ஆட்சி வரப்போகிறது என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் காங்கிரஸ் பல மாநிலங்களில் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிடுவதால் பின்னடைவு ஏற்படலாம். மாநிலங்களுக்கு மாநிலம் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுள்ளான முரண்பட்ட கூட்டணி அவர்களின் பெரிய மைனஸ். 
 
எந்த முன்னணி கட்சிகளுமே பெண்களுக்கு தேர்தலில் வாய்ப்பளிக்கவில்லை. நாம் தமிழர் கட்சி தான் 20 தொகுதியை பெண்களுக்கு ஒதுக்கி உள்ளது. என்னை பொறுத்த வரையில் மத்தியில் பெரிய அளவில் ஆட்சி மாற்றம் வர வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது என அவர் கூறினார்.
 
ஆனால் பிரபல நாளிதழ் ஒன்று மத்தியில் பெரிய அளவில் மாற்றம் வர வாய்ப்பில்லை என நடிகை கஸ்தூரி நம்பிக்கை தெரிவிர்த்துள்ளதாக  செய்தி வெளியிட்டிருந்தது.
 
இதனைப்பார்த்து கடுப்பான கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் கஸ்தூரியின் கருத்து, இல்லை கணிப்பு, இல்லை ஆருடம்னு  போட்டிருந்தா கூட ஓகே. ஆனா "நம்பிக்கை'னு போட்டு  நம்ம மேல ஒரு கட்சியின் சாயத்தை பூசும் நுட்பம் இருக்கே....அதுதான் மீடியா. ஒரே பேட்டிதான், ஆளாளுக்கு தேவைக்கு தகுந்தபடி வெட்டி ஒட்டி விளையாடுறாங்க என குறிப்பிட்டுள்ளார்.