1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : திங்கள், 29 மே 2017 (11:29 IST)

ரஜினிக்கு அறிவுரை வழங்கிய நடிகை: சிரஞ்சீவியை போல ஆகிவிடாதீர்கள்!

ரஜினிக்கு அறிவுரை வழங்கிய நடிகை: சிரஞ்சீவியை போல ஆகிவிடாதீர்கள்!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து, நடிகர் சிரஞ்சீவியை போல புதிய கட்சியை தொடங்கிவிட்டு பின்வாங்கியது போல ஆகவிடக்கூடாது என நடிகையும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான ஜெயபிரதா கூறியுள்ளார்.


 
 
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பேசப்படுகிறது. ஒரு பக்கம் பாஜக தங்கள் கட்சிக்கு ரஜினியை அழைத்து வந்தாலும் ரஜினி தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்பதையே ரஜினியை சுற்றியிருப்பவர்கள் நினைக்கிறார்கள்.
 
இந்நிலையில் நடிகையும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான ஜெயபிரதா ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்றுள்ளார். அவர் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் சாதிப்பார். வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் இருந்தாலும் எளிமையுடன் இருக்கும் அவரால் அரசியலிலும் வெற்றி பெற முடியும்.
 
மேலும் நடிகர் சிரஞ்சீவி புதிய கட்சியை ஆரம்பித்துவிட்டு பின்னர் அதிலிருந்து பின்வாங்கயது போல் ரஜினி ஆகிவிடக்கூடாது என அறிவுரை வழங்கியுள்ளார் ஜெயபிரதா.