வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : திங்கள், 26 ஜூன் 2017 (19:11 IST)

பிக்பாஸ் : முதல் நாளிலேயே சர்ச்சையில் சிக்கிய காயத்ரி ரகுராம்

விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக தொடங்கியது.


 

 
அதில் மொத்தம் 14 பிரபலங்கள் ஒரே வீட்டில் 100 நாட்கள் இருக்க வேண்டும். அவர்களே உணவை சமைத்து உண்ண வேண்டும் என்பதுதான் விதிமுறை. இதில் போட்டியில் கலந்து கொள்ளும் பிரபலங்களையும் ஒவ்வொருவராக அறிமுகம் செய்தனர். இதில் முதலில் பங்கேற்றவர் நடிகையும், நடன இயக்குனர் மற்றும் பாஜக பிரமுகரான காயத்ரி ரகுராம். 


 

 
இந்நிலையில் இவர் தனது டிவிட்டர் பக்கதில், கமல்ஹாசனோடு மேடையில் தோன்றும் போது என்னை நேரடியாக பார்க்கலாம் என அவரது பக்கத்தில் டிவிட் செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் செல்போனை எடுத்து செல்லக்கூடாது. அதேபோல், இணையம் முதல் எந்த வெளியுலக தொடர்பும் இல்லாமல் 100 நாட்கள் இருக்க வேண்டும் என்பதும் முக்கிய விதிமுறையாகும்.


 

 
அப்படியிருக்க காயத்ரி ரகுராம் எப்படி டிவிட் செய்தார் என சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து அதே டிவிட்டர் பக்கத்தில் பலரும் அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதில் சிலர் அதைக் கிண்டலடித்து மீம்ஸும் போட்டு வருகின்றனர்.