புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 3 மார்ச் 2021 (12:49 IST)

அரசியலில் இறங்கும் ”களவாணி” விமலின் மனைவி! – திமுகவில் விருப்ப மனு!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார் நடிகர் விமலின் மனைவி.

தமிழ் சினிமாவில் களவாணி படம் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து வாகை சூடவா, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட பல படங்களில் நாயகனாய் நடித்தவர் விமல். இவர் அக்‌ஷயா என்ற பெண்ணை காதலித்து சில ஆண்டுகளுக்கு முன்னதாய் திருமணம் செய்து கொண்டார்.

அக்‌ஷயா மருத்தவராய் இருந்து வரும் நிலையில் தற்போது அரசியலிலும் ஈடுபட உள்ளார். திமுகவில் உள்ள இவர் திருச்சி அருகே உள்ள மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். இந்த விருப்ப மனுவை நடிகர் விமல், அக்‌ஷயா ஆகியோர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினர்.