1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 11 ஜூலை 2023 (15:59 IST)

''மாஸ் எண்ட்ரீ...'' மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை!

vijay
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் இணைந்து திரிஷா, மிஸ்கின், அர்கூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் நடிகர் விஜய் கல்வி விழாவை பிரமாண்டமாக  நடத்தி அந்த விழாவின்போது  கருத்துகள் கூறியது  விஜயின் அரசியல் தொடக்கம் என்று பரவலாகப் பேசப்பட்டது.

இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய்  இன்று  சென்னை, பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் அலுவலகத்தில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது.

அதன்படி,  இன்று பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் அலுவலகத்தில் இதற்கான ஏற்பாடுகளை புஸ்ஸி ஆனந்த் செய்திருந்த நிலையில், இன்று மதியம் நடிகர் விஜய் அலுவலகத்திற்கு வந்தார்.

தற்போது,  மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை  நடத்திக் கொண்டிருக்கிறார்.