ரஜினி தலைவர்.. விஜய் நம்ம வீட்டுப் பிள்ளை! - ரவி மரியா ஓபன் டாக்!
தமிழ் சினிமா ரசிகர்களிடையே எப்போதுமே ரஜினி - விஜய் இடையேயான ஒப்பீடு தவிர்க்க முடியாத ஒரு விவாதமாக இருந்து வருகிறது. இந்நிலையில், பிரபல நடிகரும், இயக்குநருமான ரவி மரியா சமீபத்திய ஊடகப் பேட்டி ஒன்றில், இவர்கள் இருவரின் மக்கள் செல்வாக்கு குறித்து மிக வெளிப்படையான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
ரவி மரியா பேசுகையில், "தமிழக மக்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை எப்போதுமே ஒரு உச்ச நட்சத்திரமாக, பெரிய மாஸ் ஹீரோவாகத்தான் பார்த்துப் பழகியிருக்கிறார்கள். அவரை என்றைக்குமே 'தலைவர்' என்ற அந்தஸ்தில்தான் மக்கள் கொண்டாடுவார்கள். ஆனால், தளபதி விஜய்யின் இடமே வேறு. மக்கள் அவரை வெறும் சினிமா ஹீரோவாக மட்டும் சுருக்கிப் பார்ப்பதில்லை. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலுமே விஜய்யைத் தங்கள் சொந்த அண்ணனாக, தம்பியாக, தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே பார்க்கத் தொடங்கிவிட்டனர்," என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஒரு மாஸ் ஹீரோ அல்லது தலைவரை விட, குடும்ப உறுப்பினராகப் பார்க்கப்படும் விஜய்க்குத்தான் தற்போது மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக மிக அதிகமாக இருக்கிறது. மக்களுக்கும் விஜய்க்கும் இடையே இருக்கும் இந்த உணர்வுபூர்வமான பிணைப்பு இருப்பதால், தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் விஜய்யைக் கைவிட மாட்டார்கள் என மிக தெரிவித்துள்ளார்.