1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 5 ஏப்ரல் 2021 (10:12 IST)

இயற்கை வளம் மிக்க அக்வேரியத்தை திறந்து வைத்த நடிகர் கிருஷ்ணா!

மக்களுக்கு இயற்கை வளம் மிக்க பொழுதுபோக்கை தரும் நோக்கத்தில் அகவேரியம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் கிருஷ்ணா திறந்து வைத்தார். நடிகர் கிருஷ்ணா தன் நண்பரின் அக்வேரியம் திறப்பு விழாவில் பேசியதாவது...
 
என் நண்பன் அஷ்வின் தனக்கிருந்த அனைத்து தொழில்களையும் விட்டு விட்டு மீன்வளர்ப்புக்காக மட்டுமே இதனை துவங்கி உள்ளான். மேலும் இது முழுக்க முழுக்க இயற்கை முறையில் குழந்தைகள் மட்டும் மீன்வளர்ப்பு ஆர்வலர்களுக்காக இது திறக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் உள்ள மிக முக்கியமான அக்வேரியம்களில்  இதுவும் ஒன்று. எனவே மக்கள் அனைவரும் இங்கு வந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன் என அவர் கூறியிருந்தார்.
 
மேலும் இது குறித்து அதன் உரிமையாளர் கூறிய தாவது. அக்வேரியம் என்பது பொழுதுபோக்கர்களால் பொழுதுபோக்காக ஆரம்பிக்கப்பட்ட முறையான இயற்கை மீன் வளர்ப்பு முறையாகும் சிறுவயதிலிருந்தே மீன் வளர்ப்பதில் தனி ஆர்வம் கொண்டு வளர்த்தோம். நாங்கள் கற்ற அனைத்தையும் மற்றவர்களுக்கும் முறையாக பகிர்ந்து வருகின்றோம். 
 
அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் கிடைக்குமாறு செய்துள்ளோம். உதாரணத்திற்கு மீன்களுக்கு தேவையான உணவு வகைகள் மருந்துகள் மீன் தொட்டிகள் இயற்கை வளங்கள் ஆகிய சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றோம்.

இதைத் தவிர வீடுகளிலும் அலுவலகங்களிலும் மற்றும் கல்லூரி போன்ற இடத்தில் இயற்கை வளம் மிக்க மீன் தொட்டிகளை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப அமைத்து வருகிறோம். இந்த சேவையை வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து வருகிறோம் என அதன் உரிமையாளர் கூறியுள்ளார்.