புதன், 18 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 13 மே 2024 (14:54 IST)

4 மாதங்களில் 1000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ள மலையாள சினிமா!

கடந்த சில ஆண்டுகளாகவே மலையாள சினிமா மிகவும் ஆரோக்யமான போக்கில் சென்று கொண்டிருக்கிறது. அங்கே நல்ல கதையம்சம் உள்ள படங்களும் வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்று வருகின்றன.

கடந்த சில மாதங்களில் வெளியான பிரேமலு, ப்ரமயுகம், மஞ்சும்மள் பாய்ஸ், ஆடு ஜீவிதம், வர்ஷங்களுக்கு ஷேஷம் மற்றும் ஆவேஷம் ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளன. இந்த படங்கள் கேரளா தாண்டியும் பிற மொழி ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில் இந்த ஆண்டின் முதல் கால் பகுதியில் மட்டும் மலையாள சினிமா 990 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலையாள திரையுலகம் மிகவும் குறைந்த பார்வையாளர்களைக் கொண்ட ஒரு துறை சமீபகாலமாக வசூலில் கலக்கி வருவது குறிப்பிடத்தக்கது.