1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 4 மே 2017 (23:11 IST)

உங்க கிட்ட பணமே இல்லையா? ஏன் இப்படி செய்கிறீர்கள். நடிகர் சங்கத்திற்கு நீதிமன்றம் கண்டனம்

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு என சொந்தமாக கட்டிடம் கட்டும் பணி பூமி பூஜையுடன் சமீபத்தில் தொடங்கப்பட்டது. மாநகராட்சி அனுமதியுடன் பிளான் அமைக்கப்பட்டு ரூ.26 கோடி செலவில் கட்டப்படவுள்ள இந்த கட்டிடத்தில் தியேட்டர், ஜிம், கூத்துப்பட்டறை போன்ற வசதிகள் வரப்போகின்றது.





இந்த நிலையில் இந்த கட்டிடம் பொதுச் சாலையை ஆக்கிரமித்து கட்ட முயற்சிப்பாதாக ஶ்ரீரங்கன் அண்ணாமலை என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுவின் விசாரணை இன்று நடைபெற்றபோது, நடிகர் சங்கம் ஏன் பொது வழியை ஆக்கிரமிக்க வேண்டும். இதற்கு எப்படி மாநகராட்சி அனுமதி அளித்தது. ஏன் உங்களிடம் பணமே இல்லையா? எதற்காக பொதுவழியை ஆக்கிரமித்துள்ளீர்கள் என்று சரமாரியாக கேள்வி கேட்ட உயர் நீதிமன்றம் நடிகர் சங்கத்துக்கு இதுகுறித்து பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவு காரணமாக நடிகர் சங்கத்தின் கட்டிட பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.