திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 6 மார்ச் 2020 (20:32 IST)

தம்பி தற்கொலைக்கு காரணம் இதுதான்: நடிகர் ஆனந்தராஜ் அதிர்ச்சி தகவல்

சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட ஆனந்த்ராஜ் சகோதரர் கனகசபை குறித்த செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தனது சகோதரர் மரணம் குறித்து விளக்கமளித்த நடிகர் ஆனந்த்ராஜ், தனது சகோதரர் கடன் பிரச்சினையால் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் அவரை ஒரு சிலர் மிரட்டியதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஆனந்த்ராஜ், ‘தனது சகோதரர் கனகசபை சமீபத்தில் ஒரு வீடு வாங்கியதாகவும், அந்த வீடு குறித்து சிலர் மிரட்டியதாகவும் இது குறித்து அவர் எழுதி வைத்த கடிதத்தில் விரிவாக இருப்பதாகவும் தன்னை மிரட்டியவர்கள் பெயரையும் அவர் எழுதி வைத்துள்ளதாகவும் ஆனந்த்ராஜ் தெரிவித்துள்ளார் 
 
இதுகுறித்து புதுவை மாநில போலீசார் விசாரணை செய்து வருவதாகவும், தனது சகோதரர் தற்கொலைக்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் போலீஸ் விசாரணையில் தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஆனந்த்ராஜின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது