குமரி கடல் இயல்பு நிலைக்கு வந்தது.கண்காணிப்புடன் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!
குமரி மாவட்டத்தில் கடல் சம்பந்தமான எச்சரிக்கையை நிலையை வானிலை மையம் அறிவித்ததின் அடுத்த நாள், கடந்த (மே_6)ம் தேதி ஒரே நாளில் குமரி மாவட்டத்தில் குமரிக்கு சுற்றுலா வந்த 5-பயிற்சி மருத்துவர்கள்,குமரியை சேர்ந்த இரண்டு மீனவர்கள்,ஒரு சிறுமி என 8 -பேர் கடலில் மூழ்கி மரணம் அடைந்த நிலையில், கன்னியாகுமரி கடற்கரை பகுதி மட்டும் அல்லாது.குமரி மாவட்டம் முழுவதும் காவல்துறை கண் காண்பிப்பது, மற்றும் கடற்கரை பகுதிக்கு எவரும் செல்லாமல் தடுக்கும் நிலை நேற்று வரை தொடர்ந்தது.
கன்னியாகுமரி கடற்கரை மற்றும், கடலில் புனித நீராடும் பகுதிகளில் சுற்றுலா காவலர்கள் முழு நேர கண்காணிப்பு பணியில் இன்று (மே-11)ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு அனுமதிக்கப்படுகிறனர்.
சுற்றுலா காவலர்களுடன், காவல்துறையினரும், கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரையில் கண் காணிப்பை இணைந்து மேற்கொண்டு வருகிறார்கள்.