ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 6 பிப்ரவரி 2021 (16:02 IST)

சசிகலா வருகை.....அமைச்சர்கள் ஏன் பதற்றமடைகிறார்கள் – டி.டி.வி.தினகரன்

அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன், சசிசலா தமிழகத்திற்கு வரவுள்ள நிலையில் அமைச்சர்கள் ஏன் பதற்றமடைகிறார்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊழல் வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனைக் காலம் முடிந்த நிலையில் சசிகலா சமீபத்தில் விடுதலை ஆனார். இந்நிலையில் தற்போது கொரோனா தொற்றுக் காரணமாக பெங்களூரில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் சசிகலா வரும் 8 ஆம் தேதி தமிழகம் வரவுள்ளார்.

அவருக்கு சென்னையில் 12 இடங்களில் வரவேற்பு அளிக்க தினகரன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

இந்நிலையில், சசிகலா அண்மையில் விக்டோரியா மருத்துவமனையில் இருந்து டிஸ்ஸார்ஜ் ஆனபோது, தனது காரில் கொடியில் அதிமுக கொடி கட்டியிருந்தார் இதற்கு அதிமுகவினர் விமர்சித்தனர்.

சமீபத்தில், அதிமுக கொடியைப் பயன்படுத்தியதுதொடர்பாக சசிகலா மீது புகாரளிக்க தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி. சண்முகம் ஆகியோர் சென்னை டிஜிபி அலுவலத்தில் புகாரளித்தனர்.

இந்நிலையில், நாளை மறுநாள் சசிகலா சென்னை வரும்போது வரும்போது அவருக்கு பிரமாண்டமான வரவேற்புக் கொடுக்க நினைத்துள்ள தினகரன் தலைமையிலான அமமுவினர் இன்று காலை காவல்துறையிடம் மனு அளித்தனர், அதில்,  சென்னையில் பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

 இந்நிலையில் தற்போது அதிமுக சார்ப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சண்முகம், ஊரை அடித்துக் கொள்ளையடித்த வழக்கில் சிறைசென்று 4 ஆண்டுகள் கழித்து விடுதலையாகிய சசிகலா அதிமுகவை சொந்தம் கொண்டாடுவதை ஏற்க முடியாது . அதிமுவை சொந்தம் கொண்டாட சசிகலாவுக்கு உரிமை இல்லை என்று அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.

இதற்குப் பதிலடியாக தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், தியாகத்தலைவி சின்னம்மா அவர்களை வரவேற்க புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மீது அன்பு கொண்ட அனைவரும் மகிழ்ச்சியோடு தயாராகி வரும் நிலையில், அமைச்சர்கள் ஒன்றிரண்டு பேர் ஏன் இந்தளவுக்கு பதற்றமடைகிறார்கள் என்று தெரியவில்லை.  மேலும், அம்மா அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட இயக்கத்தின் மீதான உரிமை தொடர்பாக சின்னம்மா அவர்களால் தொடரப்பட்டு சென்னை நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கை, வசதியாக மறைத்துவிட்டு இவர்கள் பேசி வருகிறார்கள்.

இவர்களின் பேச்சையெல்லாம் மக்களும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மைத்தொண்டர்களும் முகம் சுழித்தபடி பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.