1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 24 பிப்ரவரி 2024 (15:18 IST)

காங்கிரஸ் கட்சியில் இருந்து விஜயதரணி நீக்கம்..! எம்எல்ஏ பதவியும் பறிக்கப்படும்..! காங்கிரஸ் எச்சரிக்கை..!

vijayadarani bjp
பாஜகவில் இணைந்த விஜயதரணியை காங்கிரசில் இருந்து நீக்கம் செய்து காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜய்குமார் உத்தரவிட்டுள்ளார்.
 
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட தனக்கு சீட் வழங்க வேண்டும் என்று விஜயதரணி காங்கிரஸ் மேலிடத்தை வலியுறுத்தி வந்தார். ஆனால், காங்கிரஸ் சார்பில் மீண்டும் விஜய் வசந்துக்கே சீட் வழங்க அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவதால் விஜயதரணி கடும் அதிருப்தியில் இருந்ததாக தகவல் வெளியானது.

இதை அடுத்து அவர் பாஜகவில் இணைய உள்ளதாகவும், இதற்காக சட்டமன்ற கூட்டத்தை புறக்கணித்து டெல்லியில் முகாமிட்டிருப்பதாகவும் தகவல் பரவியது.  அதன்படி டெல்லியில் பாஜக தலைமையகத்தில் எல்.முருகன் முன்னிலையில்  விஜயதரணி இன்று பாஜகவில் இணைந்தார்.
 
கட்சி தாவியதை தொடர்ந்து, அவரை காங்கிரஸில் இருந்து நீக்கி காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜய் குமார் உத்தரவிட்டுள்ளார்.  விஜயதரணி மீது அடுத்தடுத்து நடவடிக்கைகள் பாயும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
 
Selvaperundagai
விஜயதரணி பாஜகவில் இணைந்ததால் இந்தியா கூட்டணிக்கு எந்த பின்னடைவும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

மக்கள் பணியை விஜயதரணி செய்யவில்லை என்றாலும் அவரை மரியாதை உடனே நடத்தினோம் என்றும் கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு எம்எல்ஏ பதவி பறிக்கப்படும் என்றும் செல்வப்பெருந்தகை  கூறியுள்ளார்.