அபிராமி, சுந்தரத்தை ஒரே வேனில் அழைத்து வந்த போலீசார்...
குழந்தைகளை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அபிராமி மற்றும் சுந்தரத்திற்கு நீதிமன்ற காவலை அக்.12ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்காதல் விவகாரத்தில் கள்ளக்காதலனின் ஆலோசனைப்படி குழந்தைகளை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய அபிராமி மற்றும் அவரது கள்ளக்காதலன் சுந்தரம் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் இருவருக்கும் 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், நீதிமன்ற காவல் முடிவுக்கு வரவே, கடந்த 27ம் தேதி அவர்கள் இருவரையும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஒரே வேனில் போலீசார் அழைத்து வந்தனர். ஒரே வேனில் வந்த போதும், இருவரும் தனித்தனியாக, சுற்றிலும் ஏராளமான போலீசாருடன் அமர வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களின் நீதிமன்ற காவலை அக். 12ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். வேனில் இருந்து கீழே இறங்கிய போதும், மீண்டும் வாகனத்தில் ஏறிய போதும், அபிராமி துப்பட்டாவில் முகத்தை மூடிய படியும், அழுதபடியும் இருந்தார். சுந்தரமும் தலையை தொங்கவிட்டு சோகத்துடன் காணப்பட்டார். சுந்தரத்தை காண அவரின் மனைவி நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அவர் சோகமாக காணப்பட்டார்.