ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (14:21 IST)

இஸ்ரோ சிவனுக்கு அப்துல் கலாம் விருது..

இஸ்ரோ தலைவர் சிவனுக்கு தமிழக அரசின் அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவைப் போற்றும் விதமாக ”டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது” 2015 ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் அன்று வழங்கப்படுகிறது. இந்த விருது விஞ்ஞான வளர்ச்சி, மாணாக்கர் நலன் ஆகியவற்றில் சாதனை படைத்தவருக்கு வழங்கப்படும்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் அப்துல் கலாம் விருதுக்கு இஸ்ரோ தலைவர் சிவன் தேர்வு செய்யப்பட்டார்.சுதந்திர தினத்தன்று இஸ்ரோ சிவனால் வரமுடியாமல் போனதால், இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருதினை இஸ்ரோ தலைவர் சிவனுக்கு வழங்கினார்.