1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (14:15 IST)

இஸ்லாமியர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 4 சதவீத இடஒதுக்கீடு: நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

இஸ்லாமியர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 4 சதவீத இடஒதுக்கீடு குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம்  முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
 கல்வி, வேலைவாய்ப்பில் இஸ்லாமியர்களின் 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் கர்நாடக அரசின் முடிவை மே 9ம் தேதி வரை அமல்படுத்த கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு
 
இஸ்லாமியர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து, அம்மாநில அரசு கடந்த மாா்ச் 24ம் தேதி ஆணை பிறப்பித்தது. இந்த 4% இடஒதுக்கீடு ஒக்கலிகா, லிங்காயத் சமூகத்தினருக்கு கூடுதல் இடஒதுக்கீடாக பிரித்து வழங்கப்படும் எனவும், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான பிரிவில் இஸ்லாமியர்கள் இடஒதுக்கீடு பெறலாம் எனவும் அரசு அறிவித்தது!
 
மே 10ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்ட சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட அரசின் இந்த நடவடிக்கை விமா்சனங்களுக்கு வழிவகுத்தது. இதனை அடுத்து கர்நாடக அரசின் அரசாணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் கர்நாடக அரசின் முடிவை மே 9ம் தேதி வரை அமல்படுத்த கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
Edited by Siva