லிஃப்ட் கொடுத்த ஆண்டவர்: படாதபாடுபட்ட பரிதாபம்

lift
Last Modified புதன், 9 ஜனவரி 2019 (12:18 IST)
சிவகங்கையில் நபர் ஒருவர் லிப்ட் கொடுத்ததால் அவருக்கு ஏற்பட்ட விபரீதம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் ஆண்டவர். இவர் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். வேலைக்கு இரு சக்கர வாகனனத்தில் வந்து செல்வார்.
 
இந்நிலையில் நேற்றிரவு வேலை முடிந்து வண்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்த அவரிடம் இளைஞர் ஒருவர் லிப்ட் கேட்டார். பாவப்பட்டு அந்த இளைஞரை வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்றார் ஆண்டவர். சிறிது நேரத்தில் அந்த இளைஞர் கத்தியை காட்டி வண்டியை நிறுத்துமாறு ஆண்டவரை மிரட்டினார்.
 
வண்டியை நிறுத்திய ஆண்டவரை கத்தியால் சரமாரியாக தாக்கிய இளைஞர், வண்டியை பிடிங்கிக்கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டார். இதுகுறித்து அவர் போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் அந்த கொள்ளையனை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :