பலமுறை உல்லாசம்: இருமுறை கருகலைப்பு: இருண்டுபோன இளம்பெண்ணின் வாழ்க்கை

girl
Last Updated: செவ்வாய், 4 டிசம்பர் 2018 (12:38 IST)
திருச்சியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் காதலனுடன் அத்துமீறியதால் அவரது வாழ்க்கை தற்பொழுது கேள்விக்குறியாகியுள்ளது.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே பெரியபள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் நாமக்கல் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் படித்து வந்தார்.
 
அப்போது நாமக்கல்லில் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்த கார்த்திகேயன் என்பவருடன் சரஸ்வதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இவர்களது நட்பு காதலாக மாறியது. இருவரும் எல்லை மீறியதால் சரஸ்வதி கர்ப்பம் ஆனார். 
 
இருவரும் படித்துக்கொண்டிருப்பதால், இது வெளியே தெரிந்தால் அசிங்கமாகிவிடும் என கூறி சரஸ்வதியிடம் கருவை கலைக்க சொல்லியிருக்கிறார் கார்த்திகேயன். அதன்படி சரஸ்வதி கருவை கலைத்துள்ளார்.
girl1
பின்னர் படிப்பு முடிந்ததும் கார்த்திகேயனும், சரஸ்வதியும் சென்னையில் வேலைக்கு சேர்ந்தனர். இருவரும் திருமணம் செய்து கொண்டு கணவர் மனைவியாக சென்னையில் வாழ்ந்தனர். மீண்டும் சரஸ்வதி கர்ப்பமானார். இதனால் அதிர்ந்துபோன கார்த்திகேயன் நாம் இன்னும் செட்டிலாகவில்லை, பிறகு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என சரஸ்வதியிடம் கூறியுள்ளார். இதனால் மீண்டும் சரஸ்வதி கருவை கலைத்துள்ளார்.
 
இதையடுத்து நம் கல்யாணத்தைப் பற்றி வீட்டில் பேசி வருகிறேன் என கூறிவிட்டு நாமக்கல்லுக்கு சென்ற கார்த்திகேயன், இரண்டாவது திருமணத்திற்கு ரெடியானார்.
 
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சரஸ்வதி, இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் கார்த்திகேயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :