1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 22 ஜனவரி 2018 (11:45 IST)

அதிமுக அமைச்சரை கன்னத்தில் அறைந்த பெண்

திருவண்ணாமலையில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக எம்.எல்.ஏ பன்னீர் செல்வம் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலசப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ பன்னீர் செல்வம் திருவண்ணாமலை மாவட்டம் போளூரில்  திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றிருந்தார். அங்கு வந்த வசந்தமணி என்ற பெண், பன்னீர் செல்வத்தின் காலில் விழுவது போல் சென்று அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.  சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் எம்.எல்.ஏ.வின் கன்னத்தில் அறைந்த பெண்ணை  கைது செய்தனர். இந்த எதிர்பாராத சம்பவத்தால் அங்கு கூடியிருந்தவர்கள் செய்வதறியாது திகைத்தனர்
 
காயமடைந்த எம்.எல்.ஏ பன்னீர் செல்வம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின் வீடு திரும்பினார். மேலும் போளூரிலுள்ள அவரது வீட்டின் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிணை நடத்தி வருகின்றனர்.