திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 6 அக்டோபர் 2022 (09:23 IST)

துர்கா சிலை கரைத்தபோது துயரம்.. வெள்ளத்தில் மக்கள்! – ஷாக்கிங் வீடியோ!

Video
மேற்கு வங்கத்தில் துர்கா பூஜையின்போது ஆற்றில் சிலையை கரைத்தவர்கள் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக நவராத்திரி நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. நவராத்திரியின் இறுதி நாளில் துர்க்கை சிலையை ஆற்றில் கரைப்பது வடமாநிலங்களில் சில பகுதிகளில் வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி பகுதியில் துர்க்கை சிலையை மால் ஆற்றில் கரைத்தபோது திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வெள்ளப்பெருக்கில் பலரும் அடித்து செல்லப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்ட 7 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Edited By: Prasanth.K