1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 17 ஜனவரி 2024 (12:41 IST)

நாகர்கோவில் - தாம்பரம்: சென்னை திரும்பும் பொதுமக்களுக்கு சிறப்பு ரயில்..!

Train
பொங்கல் விடுமுறை முடிவடைந்ததை அடுத்து இன்று முதல் தென் மாவட்ட மக்கள் சென்னை திரும்ப உள்ள நிலையில் சென்னை திரும்பும் பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டு நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் ஒன்றை இயக்க தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது.
 
நாகர்கோவில் - தாம்பரம் ரயில் இன்று மாலை 4:30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படுகிறது இந்த ரயில் தாம்பரத்திற்கு நாளை அதிகாலை 4.10 மணியளவில் வந்து சேருன். மேலும் இந்த ரயில் நாளை காலை 8 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு நாகர்கோவிலை சென்றடைகிறது.
 
 11 ஏசி பெட்டிகள், ஐந்து முன்பதிவு பெட்டிகள்,  இரண்டு முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ரயிலானது  திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திருச்சி வழியாக தாம்பரம் வந்தடைகிறது என்றும் இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
 
Edited by Siva