1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சனி, 26 அக்டோபர் 2024 (18:21 IST)

இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து அன்னதானம் வழங்கும் சமூக சேவகர்!

சென்னை அரும்பாக்கத்தில் வசித்து வரும் வாராகி பிரகாஷ் என்பவர் ஓம் ஸ்ரீ மகா சக்தி வாராஹி பீடம் அறக்கட்டளை சார்பாக,ஏழை, எளிய மக்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அன்னதானம் வழங்கி வருகிறார்.
 
தினமும் காலை 8 மணி அளவில் கோயம்பேடு எதிரில் அமைந்துள்ள ஜெய் நகர் பூங்காவில்
இந்த அன்னதானம்
வழங்கப்படுகிறது
 
இது குறித்து  வாராகி பிரகாஷ் கூறும்போது.....
 
‘தனியொருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்’
என்பதற்கிணங்க
ஓம் ஸ்ரீ மகா சக்தி வாராஹி பீடம்
அறக்கட்டளை சார்பாக  கடந்த 2 ஆண்டுகளாக இந்த அன்னதான திட்டத்தை வழங்கி வருகிறோம்.
 
மத நல்லிணக்கத்துக்கும் சமூக சேவைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்வதாக கூறிக்கொள்வதை விட,அதை விளம்பரப்படுத்தாமல் செயலில் காட்டுவதே உண்மையான சேவையாக நான் கருதுகிறேன்.
 
அது மட்டுமின்றி திருமண நாள், பிறந்தநாள், முன்னோர்களின் நினைவு நாட்களில் எங்களுடன் இணைந்து உடனிருந்து யார் வேண்டுமானாலும் அன்னதானம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.
 
இதனை தொடர்ந்து அண்ணா நகர் (பகுதி -8)மெட்ரோ  தலைமை பொறியாளர் எச் அப்துல் ரகுப் மற்றும் துணை நிர்வாக பொறியாளர் ஆர். கே. புவியரசு ஆகியோர்கள் இந்த   அன்னதான நிகழ்வில் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.