1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 16 ஏப்ரல் 2018 (11:52 IST)

பாஜக கொடிக்கம்பத்தில் காலணி: அரியலூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

காஷ்மீரில் ஆசிபா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பாஜகவினர் பேசியதில் இருந்தே பாஜகவின் மரியாதை காற்றில் பறந்து வருகிறது. இங்கு பெண் குழந்தைகள் உள்ளனர். எனவே ஓட்டு கேட்க வரும் பாஜகவினர் உள்ளே வரவேண்டாம் என்ற பதாகை பல வீடுகளின் முன் காணப்படுகிறது
 
இவ்வாறு பாஜகவின் இமேஜ் அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்று அரியலூர் அருகே ஒட்டக்கோவில் என்ற பகுதியில் இருந்த பாஜக கொடிக்கம்பத்தில் மர்ம நபர்கள் சிலர் காலணியை கட்டிவைத்துள்ளனர்.
 
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி பாமகவினர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் செய்தனர். காவல்துறையினர் விரைந்து வந்த கொடிக்கம்பத்தில் இருந்த காலணியை அகற்றினர். பின்னர் இதுகுறித்து விசாரணை செய்து கொடிக்கம்பத்தில் காலணியை கட்டிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்,.