ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 18 நவம்பர் 2023 (14:31 IST)

பெண்ணிடம் ஆபாசமாக நடந்த காவலர் கைது!

abuse
சென்னை மின்சார ரயிலில் பெண் ஐடி ஊழியரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மின்சார ரயிலில் கடந்த 14 ஆம் தேதி தாம்பரம் காவல் நிலைய காவலர் கருணாகரன் தனது அந்தரங்க உறுப்பைக் காட்டி ஆபாசமாக நடந்து கொண்டதை பெண் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

அப்போது, காவலர் கருணாகரன்  நான் போலீஸ் எனக் கூறி மிரட்டியுள்ளார். இதையடுத்து அப்பெண் ஆதாரங்களுடன் புகார் கூறியதை அடுத்து, காவலர் கருணாகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.