1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 14 மார்ச் 2023 (19:11 IST)

கொலைவழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவர் ஓட ஓட வெட்டிக்கொலை

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகில் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர் ஓட ஓட வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் அருகேயுள்ள தேவிப்படினம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தன் அண்ணன் மகளைக் கேலி செய்தவரைத் தட்டிக் கேட்கப் போய் அது, அடிதடியாகி கொலையில் முடிந்தது.

இந்த சம்பவத்தில் செல்வக்குமார், சில நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.

அப்போது, அவரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் விரட்டி விரட்டி ஒரு மர்ம கும்பல் தென்னந்தோப்பிற்குல் வைத்து வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர்.

இந்தச் சம்பவத்தில் செல்வக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, அருகிலுள்ளோர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தைக் கைப்பற்றி, இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.