புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 27 மே 2019 (13:32 IST)

’மர்ம உறுப்பை ’அறுத்து தற்கொலைக்கு முயன்ற நபர் !

சென்னை மாதவரம் பகுதியில் எப்போதும் மதுபானம் கிடைக்கிறது. இதனால் அங்குள்ள மதுபானப் பிரியர்கள் மதுவுக்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள்.
சென்னை மாதவரம் ரெட்டேரி சந்திப்பில் உள்ள திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் அஸ்ஸாம் (49).அவர் நேற்று காலையில் 9 மணி அளவில் ரெட்டேரி சந்திப்பு டாஸ்மாக் அருகில் இருக்கும் மதுபானக்கடையில் மது குடித்துள்ளார்.
 
அதிகமான மது குடித்ததால் அவருக்கு போதை அதிகமாகி உள்ளது. இதனையடுத்து என்ன செய்வது என்று தெரியாத அவர் தன்னிடமுள்ள சிறு கத்தியில் தனது மர்ம உறுப்பை அறுத்துக்கொண்டார்.
 
பின்னர் வலி தாங்க முடியாமல் அதே இடத்தில் சரிந்து விழுந்தார். இதைக்கண்டபோலீஸார் போலிஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.இதனையடுத்து கள்ளச் சந்தையில் மதுபானம் விற்போர் அங்கிலிருந்து ஓடினர். 
 
இந்நிலையில் அங்கு ரத்த வெள்ளத்தில் மயங்கிக்கிடந்த நபரை மீட்ட போலீஸார். அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவருக்கு சிகிச்சை நடைபெற்று வருவதாகத் தகவல் தெரிவிக்கின்றன.